’மனைவி தனிமையில் வாடுவதை நான் உணரவில்லை, போதைக்கு அடிமையானேன்’ மனைவி இறந்த துக்கத்தை தற்போது வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்…

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் போதைக்கு அடிமையான ஜாம்பபவான் வாசிம் அக்ரம் மனைவி இறந்த பின்னர் உருக்கமாக சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானார். கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கடந்த 2003-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில்இவர் 900 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார்.

இந்நிலையில் தற்போது சுல்தான் எ. மீமொயர் என்ற பெயரில் வாசிம் அக்ரம் சுயசரிதைநூல் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வர்ணனையாளராக இருந்தபோது கோகைன் பயன்படுத்தத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

வாசிம் அக்ரம் தனது போதைப்பழக்கம் குறித்து கூறி இருப்பதாவது எனது ஓய்வுக்காலத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல போதைப்பழக்கம் நுழைந்தது. இங்கிலாந்தில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்க சென்றபோது கோகைன் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். நாளுக்குநாள் நான் அடிமையாகிவிட்டேன்.

ஒரு இரவில் 10 விருந்துக்கு நீங்கள் போக முடியும். அவ்வாறு சென்றது என்னை பாதித்தது. கோகோயின் என்னை ஒழுங்கற்றவராகவும் நேர்மையற்றவராகவும் ஆக்கிவிட்டது. இந்த கடினமான நேரத்தில் தனது முதல் மனைவி ஹுமா தனிமையை அனுபவித்திருக்கின்றார். நான் அதை உணர்ந்ததில்லை. அடிக்கடி என்னிடம் நான்கராச்சிக்கு செல்கின்றேன் என கூறி என் பெற்றோரிடம் வாழ விரும்புகின்றேன் என கூறுவார். நான்தான் வற்புறுத்தி இருக்க வைத்தேன்.

இப்படியே ஒவ்வொரு நாளும் நான் செல்வத கண்டு அவள் எப்படி மனம் உடைந்திருப்பாள் என இப்போது நான் உணர்கின்றேன். 2009ம் ஆண்டு என்னை விட்டு முழுமையாக அவர் சென்றுவிட்டார். அப்போது உணர்ந்தேன். அதைத் தொடர்ந்து நான் போதைப் பழக்கத்தை விட்டுவிட்டேன். என் மனைவி என்னை விட்டு பிரிந்தது என் வாழ்வில் மறக்க முடியாத இழப்பு. அரியவகை பூஞ்சை தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். என குறிப்பிட்டுள்ளார். பின்னர் வாசிம் அக்ரம் ஷனீரியா தாம்சன் என்ற ஆஸ்திரேலியா பெண்ணை 2013ல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

Tue Nov 1 , 2022
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை நீங்கள் தொலைத்துவிட்டால் பணம் செலவழிக்காமல் அபராதம் கட்டாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். முன்பதிவு செய்த டிக்கெட் ஏதோ ஒரு சில காரணங்களால் தொலைந்துவிட்டாலோ அல்லது அவசரத்திற்கு கையில் கிடைக்கவில்லை என்றாலோ நமக்கு இழப்பு ஏற்படும். டிக்கெட் சோதனையின் போது காட்டவில்லை என்றால் நாம் அபராதம் செலுத்த நேரிடும். அதே நேரத்தில் பயணமும் செய்ய வேண்டும். அபராதம் கட்டக்கூடாது என்ன செய்யலாம். இப்படி […]

You May Like