அந்த அங்கிள் தொடறது எனக்கு புடிக்கல; பள்ளிக்குச் செல்ல அடம் பிடித்த சிறுமி.. வெளியான பகீர் தகவல்..!

தனியார் பள்ளியில் படித்து வரும் ஐந்து வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் ஐந்து வயது மகள் பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென சிறுமி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அழுது அடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் பெற்றோர் சிறுமியை பள்ளிக்கூடம் போகுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் சிறுமி பள்ளிக்கூடம் செல்வதற்கு பயந்து அழுதுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் எதனால் நீ பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று சொல்கிறாய் என விசாரித்தனர். அதற்கு சிறுமி நான் வகுப்பறையில் இருந்து, மாடிப்படியில் கீழே இறங்கி வரும் போது ஸ்கூலில் பியூனாக வேலை பார்க்கும் ராஜ் (38) என்பவர், தன்னை சில இடங்களில் தொட்டு பேசுவது தனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அழுது உள்ளார்.

இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பள்ளி ஊழியர் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Baskar

Next Post

இந்த 2 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க.. மிக அதிக கனமழை பெய்யுமாம்..

Wed Jul 13 , 2022
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ […]

You May Like