அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

“தீபாவளியைப் போல உணர்ந்ததால் சுட்டுவிட்டேன்..” மோடியின் கோரிக்கையை தவறாக புரிந்துகொண்ட பாஜக பெண் தலைவர்..

பிரதமர் மோடியின் விளக்கேற்றும் கோரிக்கையை தவறாக புரிந்துகொண்ட பாஜக பெண் தலைவர் மஞ்சு திவாரி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

manju tiwari

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி, தீபங்களை ஏற்றி கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இத்தகைய சூழலில் கொரோனாவின் ஆபத்தை உணராத சிலர், மோடியின் வேண்டுகோளை பயன்படுத்தி பட்டாசு வெடித்தும், வாண வேடிக்கைகள் மூலமும் தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று பாஜக பெண் தலைவர் ஒரு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் வசிக்கும் பாஜக மகளிரணி தலைவர் மஞ்சு திவாரி, தனது கணவரின் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார். முதலில் இந்த தம்பதிகள் தங்கள் வீட்டில் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றியுள்ளனர்.

பின்னர் தனது மனைவியிடம் துப்பாக்கியை கொடுத்த திவாரி, அவரை வானத்தை நோக்கி சுடச்சொல்லி அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், காவல்துறையினர் மஞ்சு திவார் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிக்கான உரிமத்தையும் அவர்கள் ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மஞ்சு திவாரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் பேசிய அவர் “ ஒட்டுமொத்த நகரமும் அகல் விளக்குகளாலும், மெழுகுவர்த்திகளாலும் ஒளிருவதை நான் கண்டேன். இதனால் தீபாவளி என்று உணர்ந்த நான், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன்.

நான் எனது தவறை ஏற்றுக்கொள்கிறேன், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதிக உற்சாகத்தின் காரணமாகவே நான் இப்படி செய்துவிட்டேன். எனது செயல் காரணமாக யாராவது காயமடைந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனா வைரஸ் : பெண்களை விட ஆண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் : மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..

Mon Apr 6 , 2020
பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகவர்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் வயது மற்றும் பாலினம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், கொரோனா உயிரிழப்புகளில் 73% பேர் ஆண்கள் […]
coronaviurs

You May Like