’’ஓசி பேருந்தில் நான் வரமாட்டேன் ’’ ட்ரெண்ட்ஆன பாட்டி மீது வழக்கு …

ஓசி பேருந்தில் நான் வரமாட்டேன் என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாட்டி மீது வழக்கு பதிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் பேருந்தில் பயணம் செய்த பாட்டி ஒருவர் ’’ஓசி பேருந்தில் நான் வர மாட்டேன்’’ இந்தா காசபுடி என பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி நான் விளையாட்டாக பேசியதை யாரும் பெரிது படுத்தவேண்டாம் என கூறி வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இலவச பயண பேச்சுக்காக வழக்கு பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது விரைவில் அதை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் , பேருந்து பயணம் பற்றி நக்கலாக பேசிய அமைச்சரை கண்டிக்காமல் மூதாட்டியின் மீது பொய் வழக்குப் போடுவதா ? இது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் , ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசு , அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தும் வகையில் வழக்குப் பதிவு செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேற்கு மண்டல ஐஜி அலுவலகம் முன்புமுற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மூதாட்டி மீது வழக்கு எதுவும் பதியவில்லை என தெரிவித்துள்ளார்.  

Next Post

’செல்போன் பயன்படுத்துவதை நம்மிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்’...! வெற்றிமாறன்

Sun Oct 2 , 2022
குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு அதிகரிக்கப் பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினர். பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘அரும்பு’ புத்தக விற்பனையகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னாள் மேற்குவங்க ஆளுநரும் காந்தியடிகள் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய வெற்றிமாறன், ‘வாழ்வில் வாசிப்பு என்பது இன்றியமையாத குணம், டிஜிட்டல்மயனான பிறகு அறிவுக்காகப் […]

You May Like