இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

ஒருவேளை கிம் இறந்துவிட்டால் அடுத்து என்ன நடக்கும்..? வடகொரியாவின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன..?

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியில் பல விசித்திரமான விதிகள், சட்டங்கள்


குறித்து அனைவரும் அறிந்ததே. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் ரகசியமான நாடாகவும், உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி தனித்திருக்கும் நாடாகவும் வடகொரியா கருதப்படுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் மூச்சு விட வேண்டும் என்றால் கூட, கிம்மின் உத்தரவை பெற வேண்டும்.

கிம்

ஆம்.. கிம் சொல்வது மட்டுமே அவர்களின் வேதவாக்கு. ஒருவேளை அரசையோ அல்லது அதிபரையோ ஒருவர் விமர்சித்தால், அவர் உயிரை விடுவதை தவிர வேறு வழி இல்லை. அத்தகைய கொடூர சர்வாதிகார ஆட்சியின் கீழ் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.

நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அங்கு கடுமையான சட்டதிருத்தங்கள் உள்ளன. பல அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கு கூட வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மர்மமான நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டாலும், இங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.

kim jong un

வடகொரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமாகும். ஆனால் நம் நாட்டை போலவோ அல்லது மற்ற நாடுகளை போலவோ அங்கு நிறைய வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள். ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவார்.. அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. எனவே கிம் குடும்பத்தினர் மட்டுமே அங்கு பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். நாட்டின் அதிபரான கிம்-க்கும், அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.

கிம்மின் தாத்தா கிம் இல் சுங் நாட்டில் அதிகமாக மதிக்கப்படுபவர். வட கொரியர்கள், அவரை நாட்டின் தந்தை என்று கருதுகின்றனர். 1945 இல் வட கொரியாவில் ஜப்பானிய ஆட்சி முடிவடைந்த பின்னர், அவர் தனது ஆட்சியை நிறுவினார். அதன்பிறகு, அவரது குடும்பம் மட்டுமே, ஆட்சி செய்து வருகின்றனர். வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங் மற்றும் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன்னின் தந்தை அவரது மகன் கிம் ஜாங் இல் ஆகியோரின் மில்லியன் கணக்கான உருவப்படங்கள், மொசைக் மற்றும் ஓவியங்கள், தங்கள் நாட்டில் கிம் வம்சத்தின் நாட்டிற்கு ஆற்றிய முக்கிய பங்கைப் பற்றி மக்களுக்கு தினசரி நினைவூட்டுகின்றன.

5e179d1449878c0b372a8b13

இவை ஒருபுறம் இருந்தாலும், சர்வாதிகார ஆட்சியின் கீழ் தான் வாழ்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் இதில் வேடிக்கையான உண்மை. ஏனெனில் அவர்களுக்கு மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது அல்லது உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது. அந்நாட்டில் இணையதளத்திற்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் அரசு ஊடகம் என்ன செய்தி வெளியிடுகிறதோ அதனை மட்டுமே அவர்கள் பார்க்க முடியும்.

கடந்த சில மாதங்களாக, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பொது வாழ்க்கையிலிருந்து காணாமல் போனது அவரது உடல்நிலை குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. மேலும் அவர் தனது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் சில அதிகாரங்களை ஒப்படைத்துள்ளார் என்று வெளியான தகவல்கள் அந்த ஊகங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிம்மிற்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு அவரது உடல்நலம் மோசமடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மற்ற ஜனநாயக நாடுகளைப் போலல்லாமல், உலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் வடகொரியா அடுத்தடுத்த திட்டத்தை கொண்டிருக்கவில்லை. அங்கு 1948 முதல் கிம்மின் குடும்பம் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு, 36 வயதான கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிபரானார்.

Kim Jong Un KCNA AP

கிம்மின் தாத்தா கிம் இல் சுங் 1948 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த போது, அவரைச் சுற்றி ஆளுமை வழிபாட்டு முறை வளர்ந்தது. அது பின்னர் அவரது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது. அவரது மகன் கிம் ஜாங் இல் மற்றும் பேரன் கிம் ஜாங் உன் ஆகியோர் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றனர்.

ஒரு ஜனநாயக நாட்டில், உதாரணமாக இந்தியா போன்ற நாடுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் திறமையற்றவராக இருந்தால் அல்லது வேறு சில காரணங்களால் தனது கடமைகளைச் செய்ய முடியாவிட்டால், அரசு விவகாரங்களை நடத்துவதற்கு நாட்டின் அரசியலமைப்பால் அதிகாரம் பெற்ற அமைப்புகள், நெறிமுறைகள் மற்றும் பதவிகள் உள்ளன.

ஆனால் வட கொரியாவில், தலைவர் கிம் பரம்பரையை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். எனவே கிம் ஜாங் உன் உயிரிழந்தது உண்மை என்ற பட்சத்தில், அவரது மகன்களுக்கு பதவி வரும். ஆனால் கிம்மிற்கு 3 மகன்கள் உள்ளனர் எனவும், அவரது மூத்த மகன் 2010-ல்இல் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, நாட்டின் விவகாரங்களை நடத்துவதற்கான பொறுப்புகள் அவரது சகோதரி கிம் யோ ஜாங்கின் தோள்களில் உள்ளன. ஏனெனில் வட கொரியத் தலைவர் நம்பும் ஒரே ஒரு நபர் அவர் மட்டும் தான்.

கிம்

அண்டை நாடான தென் கொரியாவின் புலனாய்வு அமைப்பு, கிம் தனது சகோதரியை உண்மையான இரண்டாவது அதிகார மையமாக மாற்றியுள்ளார் என்று கூறுகிறது. சியோல் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகளுக்கான பொறுப்பை கிம் தனது சகோதரிக்கு ஒப்படைத்துள்ளார் என்றும அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு வியட்நாமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பின் போது கிம் யோ ஜாங் பிரபலமடைந்தார். அந்த சந்திப்பின் போது அனைத்து ஏற்பாடுகளையும், அவரது சகோதரி சிறப்பாக செய்திருந்தார். ஒருவேளை கிம் இறந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு அடுத்ததாக, அவரது சகோதாரி தான் ஆட்சி அதிகாரித்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் வடகொரியாவில் கிம் தெய்வமாக கருதப்படுவதால், அவரின் இறப்பு குறித்த செய்தி நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பலாம்.

north korea

அதனால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, கிம்மின் இறப்பு செய்தியை வெளியிடலாம் என்றும் தெரிகிறது. எனினும் கிம் உடல்நிலை குறித்து வடகொரிய அரசு ஊடகங்கள் வாய்திறக்காத நிலையில், தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்த பிறகே கிம்மின் உண்மை நிலை உலகிற்கு தெரியவரும்.. அதுவரை காத்திருக்க தான் வேண்டும்…

1newsnationuser1

Next Post

நெற்றியில் சந்தனம், குங்குமம் வைப்பதன் காரணம் இதுதான்...!!

Tue Aug 25 , 2020
ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் வைக்கும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் ‘நெற்றியில் பொட்டு’ அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடமான அப்பகுதியை யோக முறையில், ஆக்ஞா சக்கரம் என்று சொல்லப்படுகிறது. மனித உடலில் […]
நெற்றியில் சந்தனம், குங்குமம் வைப்பதன் காரணம் இதுதான்...!!

You May Like