
சென்னை : கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தொடங்கிவிட்டன. தற்போது அதே நிலை தான் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என பல பள்ளிகள் பெற்றோர்களிடம் வற்புறுத்துவதாக தமிழகத்தில் தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே ஊரடங்கு காலக்கட்டத்தில் பல குடும்பங்கள் இக்கட்டான நிலையினை சந்தித்துவருகின்றனர். எனவே ஆன்லைன் வகுப்புகளுக்காக தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை இந்தாண்டு கட்டக்கோரி வற்புறுத்தினால் அப்பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.