’சிங்கிள்’ என்றால் விடுமுறை நாளில் வேலைக்கு அழைப்பீர்களா..? கடுப்பில் வேலையை ராஜினாமா செய்த ஊழியர்..!!

’சிங்கிள்’ என்பதால் விடுமுறை நாளில் வேலைக்கு வரச் சொன்னதில் விரக்தியடைந்து ஊழியர் ஒருவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.


சமீப காலமாக கார்ப்பரேட் வேலையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிக பணி சுமை, விடுமுறை அற்ற வேலை, நீண்ட வேலை நேரம் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. சமூக ஊடங்களின் தாக்கத்தால் இதுபோன்ற பாதிப்புகள் எளிதில் வெளி உலகிற்கு வந்துவிடுகிறது. முன்பெல்லாம் இந்த மாதிரியான நெருக்கடிகளை பெரும்பாலும் மூடி மறைத்து விடுவார்கள். ஆனால், தற்போது மக்கள் அதுகுறித்து வெளிப்படையாக வெளி உலகிற்கு தெரியப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. தான் சிங்கிளாக இருப்பதால், அலுவல விடுமுறை நாளில் கூட தனது மேனேஜர் வேலைக்கு வரச் சொல்வதாக, மிகவும் விரக்தியில் இருந்த ஊழியர் தனது வேலையையே ராஜினாமா செய்து அதிர்ச்சியை தந்துள்ளார். மேலும், ரெட்டிட் தளத்தில் மேனேஜர் செய்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில், அவரது மேனேஜர் தனது விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டு தனது விடுமுறை நாளில் வேலைக்கு வருமாறு அவரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. அதிலும் அந்த நபர் ‘சிங்கிள்’ என்பதற்காக அவரது அனைத்து விடுமுறை திட்டங்களையும் விட்டுவிட்டு வேலைக்கு வர சொன்னது தான், அந்த பதிவை படிக்க கூடிய எல்லோருக்கும் மிகப்பெரும் கடுப்பை கிளப்பி உள்ளது.

இந்த சாட்டில், “தான் வர இயலாது என்றும், அவரது சக ஊழியரான பிராய்னை அழைத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த மேனேஜர் பிராய்ன் குடும்பத்தஸ்தர் மற்றும் குழந்தைகள் உள்ளது என்பதால் அவரை விடுமுறை நாளில் வேலைக்கு அழைக்க முடியாது. நீங்கள் சிங்கிளாக இருப்பதால் வந்து வேலை செய்யவும் ஆணை இட்டுள்ளார்.” இந்த சாட் தான் அந்த ஊழியரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.

பலர் இந்த பதிவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், ‘எவ்வளவு மோசமாக இந்த மேனேஜர் நடந்து கொள்கிறார்’ என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், ‘எப்படி விடுமுறை நாளில் வேலை செய்ய அழைக்கலாம். இது மிகவும் தவறு’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சிலர் ‘இது போன்ற மேனேஜர்கள் ஊழியர்களை விடுமுறையில் வேலைக்கு அழைப்பது, நல்ல கம்பெனியில் அவர் வேலை செய்யவில்லை என்பதை குறிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளனர்.

CHELLA

Next Post

வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…..! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை……?

Tue Jul 4 , 2023
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்காக வாய்ப்பிருக்கிறது. நீலகிரி கோவை போன்ற மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் கன முதல், மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் […]
heavy rains12 1634698046 1

You May Like