பற்களை சரியாக கவனிக்கவில்லை எனில்.. இந்த ஆபத்தான நோய்கள் ஏற்படும்… புதிய ஆய்வில் தகவல்…

வாய்வழி சுகாதாரம் உங்கள் மூளையின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது..

வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க காலை, இரவு என இரு வேளையும் கண்டிப்பாக பல துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர்… இதனால் பற்கள் வெள்ளையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.. பற்களின் ஆரோக்கியத்தை பின்பற்றுவது பிற வாய்வழி பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவில்லை எனில், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.. ஆனால், உங்கள் வாய்வழி சுகாதாரம் உங்கள் மூளையின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்.. உண்மை தான் வாய்வழி ஆரோக்கியம் மோசமாக இருந்தால் அது மூளை ஆரோக்கியம் குறைவதற்கு வழிவகுக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.. எனினும் ஆரம்பநிலையிலேயே அதனை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், பிரச்சனைகளை தவிர்க்க உதவும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதுவரை இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்படவில்லை என்றாலும், அடுத்த வாரம் அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன் இன் சர்வதேச பக்கவாதம் மாநாட்டில் இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட உள்ளது.. இந்த மாநாடு பிப்ரவரி 8-10, 2023 வரை அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற உள்ளது. நல்ல வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிப்பது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வாய்வழி ஆரோக்கியம் மற்றும் உடலில் மற்ற இடங்களில் உள்ள எதிர்மறையான உடல்நல விளைவுகளுக்கு இடையிலான தொடர்பை கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்..

யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நரம்பியல் துறையில் ஒரு முதுகலை ஆசிரியரும் ஆய்வு ஆசிரியருமான டாக்டர். சைப்ரியன் ரிவியர் இதுகுறித்து பேசிய போது “ முந்தைய ஆராய்ச்சி மோசமான பல் ஆரோக்கியத்தை இதய நோய் ஆபத்து காரணிகளுடன் இணைத்திருந்தாலும், புதிய ஆராய்ச்சி பல் ஆரோக்கியத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவை மதிப்பீடு செய்தது.

வாய்வழி சுகாதாரத்தில் நாம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது வாய் மட்டுமின்றி பிற உறுப்புகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.. ஈறு நோய்கள் அல்லது வாய்வழி சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது தவிர, வாய்வழி உடல்நலப் பிரச்சினைகள் இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடையவை என்பதை கண்டறிந்துள்ளன. மேலும் பல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு மூளை ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம்..

இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தப்பட்டால், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறிப்பிடத்தக்க நன்மைகளுக்கு வழிவகுக்கும்.. வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மூளையின் ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது என்பதை இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது.. எனினும் அதற்கு மருத்துவ பரிசோதனைகள் மூலம் கூடுதல் சான்றுகள் சேகரிக்கப்பட வேண்டும்..” என்று தெரிவித்தார்..

இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 40,000 நபர்களுக்கு வாய் ஆரோக்கியத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் இடையிலான சாத்தியமான உறவை ஆய்வு செய்தனர். கூடுதலாக, பங்கேற்பாளர்களின் மூளையின் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் மோசமான மூளை ஆரோக்கியத்திற்கான அறிகுறிகளைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டன.

பற்கள் தொடர்பான பிரச்சனை அல்லது வாய்வழி பிரச்சனை உள்ளவர்களிடம் மூளை மற்றும் அதன் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் அதிகம் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மரபணு ரீதியாக மோசமான வாய் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு மூளையின் அமைப்பில் அதிக சேதம் ஏற்படுவதும் கண்டறியப்பட்டது.

Maha

Next Post

அசத்தல்...! 4 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்...! கல்வி அமைச்சர் அறிவிப்பு...!

Mon Feb 6 , 2023
திரிபுரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளத்தில் உள்ளதைப் போல 2 லட்சம் புதிய வேலைகள், 4 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திரிணாமுல் […]

You May Like