"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

‘கொரோனா வைரஸ்’ என்ற வார்த்தையை சொன்னாலே கைது..!! வித்தியாசமான முறைகளில் லாக்டவுனை பின்பற்றும் நாடுகள்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆனால் அனைத்து நாடுகள் வெவ்வேறு முறைகளை பின்பற்றி லாக்டவுனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் ஒரு சில நாடுகளில் பின்பற்றப்படும் சில புதுமையான லாக்டவுன் முறைகளை தற்போது பார்க்கலாம்..

coronavirus

முதலில் நாம் பார்க்கப்போகும் நாடு பனாமா.. தென் அமெரிக்க நாடான இந்த நாட்டில் சுமார் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பனாமா நாட்டிலும் லாக்டவுன் அமலில் உள்ளது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமான நடைமுறைகள் இங்கு பின்பற்றப்படுகின்றன.

ஆம்.. பாலினத்தின் அடிப்படையில் இங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பனாமாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி உள்ளது. ஆனால் மக்கள் வெளியே செல்வதற்கு பாலின அடிப்படையிலான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக வாரத்தின் சில நாட்கள் பெண்களும், சில நாட்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் பெண்களுக்கு வெளியே செல்ல 2 மனி நேரம் அனுமதி உள்ளது. செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் ஆண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஞாயிற்றுக் கிழமைகளில் யாரும் வெளியேற முடியாது, அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

corona lockdown

அடுத்து நாம் பார்க்க போகும் நாடு துர்க்மெனிஸ்தான்.. கொரோனா பெருந்தொற்று நோயை சமாளிக்க இந்த நாட்டில் முற்றிலும் வித்தியாசமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ‘கொரோனா வைரஸ்’ என்ற வார்த்தையே இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின் படி, அரசின் சுகாதாரத் துறை விளம்பரங்களில் இருந்து கொரோனாவைரஸ் என்ற வார்த்தை நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நாட்டில் யாரேனும் கொரோனா வைரஸ் குறித்து பேசினாலோ அல்லது மாஸ்க் அணிந்து கொண்டு வெளியில் நடமாடினாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். கொரோனா காரணமாக அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் துர்க்மெனிஸ்தானில் இதுவரை ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

turkmensitan

இந்த பட்டியலில் அடுத்து நாம் பார்க்க போவது ஆஸ்திரியா நாட்டை பற்றித்தான்.. ஆரோக்கியமாக உள்ள மக்கள் மாஸ்க் பயன்படுத்த தேவையில்லை என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் உடல்நலம் சரியில்லாதவர்களை பார்த்து கொள்பவர்கள் மாஸ்க் அணியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆஸ்திரியா நாட்டில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கு வெளியில் நடமாடும் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செக் குடியரசு, ஸ்லோவேக்கியா, ஹெர்ஸ்கோவினியா ஆகிய நாடுகள், பொது இடங்கள் மாஸ்க் அணிந்து செல்வதை கட்டாயமாக்கி உள்ள நிலையில், தற்போது ஆஸ்திரியா 4-வது நாடாக இணைந்துள்ளது.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் கொரானாவால் இரண்டாவது பலி

Sat Apr 4 , 2020
தமிழகத்தில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை தரப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அரசு […]
images 25

You May Like