சென்னையில் உள்ள ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது பலரின் ஏக்கமாக இருக்கலாம். தற்போது உள்ள இந்த சூழலில் பலரும் எளிதில் அணுகும் வகையில் ஆன்லைன் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது அனைத்து வயதினரும் பட்டப்படிப்பு படிக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது இளங்கலை படிப்பான Programming and Data Science துறையின் ஆன்லைன் படிப்பு. இதில் படிக்க வயது வரம்பு தேவை இல்லை. விருப்பமுள்ள நபர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதள முகவரியில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே வேறு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் / பயின்று கொண்டிருந்தாலும் / இடைநிறுந்தம் செய்திருந்தாலும் இதில் விண்ணப்பிக்கலாம். இது ஐஐடியின் அதிகாரப்பூர்வ படிப்பு என்பதால் முறையான சான்றிதழுடன் பட்டப்படிப்பு முடிக்கலாம்.