பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..?

20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்.. அதுவும் குறைந்த செலவில்.. ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..

கொரோனா தொற்று உள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறிய உதவும் கோவிட் 19 பரிசோதனை கருவியை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

20 நிமிடங்களில்

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சராசரியாக தினமும் 8,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் 7-ம் இடத்தில் இருந்த இந்தியா, நேற்று உலகளவில் 6வது இடத்திற்கு முன்னேறியது. இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக இதுவரை 6,929 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மலிவு விலையில் கொரொனா பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர். ரூ. 550 செலவில் இந்த கருவியை கண்டுபிடித்ததாக கூறியுள்ள அவர்கள், அதிகளவில் இந்த கருவியை உற்பத்தி செய்யும் போது ரூ.350 என்ற அளவுக்கு இதன் விலை குறையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

test kit

தற்போது கொரோனா தொற்றை கண்டறியும் முறையை காட்டிலும், இது மாறுபட்ட முறை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய கருவியின் மூலம் கொரோனா தொற்று உள்ளதா என்பதை எளிதில் கண்டறிய முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளற்ற நோயாளிகளுக்கு இந்த கருவி மூலம் சோதனை செய்தால் வெறும் 20 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய பரிசோதனை கருவிக்கு காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த கருவிகளை கொண்டு சோதனை முறையில் பரிசோதனை செய்ப்பட்டு வருகிறது.

1newsnationuser1

Next Post

ஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்! சிறப்பம்சங்கள் என்ன?

Sun Jun 7 , 2020
ஒப்போ நிறுவனம் சீனாவில் தனது புதிய 5ஜி மொபைலான ரெனோ4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 128 மெமரி, 8 ஜிபி ரேம் மற்றும் 5ஜி வசதிகளுடன் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன ரெனோ4 மாடலை சீனாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை தோராயமாக 40,500 ரூபாயாக இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ4 5ஜி […]
1591427018 4976

You May Like