கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை போட்டு தள்ளிய மனைவி…..! தானாக வந்து சிக்கி பலியான நண்பர்….!

சமூகத்தில் இருக்கும் நபர்களை தடம் மாறி போக வைப்பது இரண்டே விசயம் தான் ஒன்று முறையற்ற ஆசை, மற்றொன்று மது இந்த இரண்டும் இல்லாமல் போனால் சமூகம் நன்னெறியை நோக்கி நடைபோடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மது, முறையற்ற ஆசை, முறையற்ற உறவு இவையாவும் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்ற அளவில் தான் தற்போதைய சமுதாயம் இருந்து வருகிறது.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை எடுத்துள்ள நடராஜகுலத்தை சார்ந்தவர் சுகுமார் (45), இவருடைய மனைவி கவிதா (36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

சுகுமார் செங்கல்பட்டு பகுதியில் இருக்கின்ற ஒரு கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி கவிதா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த சூழ்நிலையில் கவிதாவிற்கும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் நாளடைவில் கவிதாவின் கணவருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அவரை அவருடைய கணவர் கண்டித்து இருக்கிறார்.ஆகவே இருவருக்கும் இடையே இது தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், கள்ளக்காதலக்கு தடையாக இருந்த கணவரை தீர்த்து கட்ட மனைவி முடிவு செய்து இருக்கிறார்.

ஆகவே சுகுமாரின் அண்ணன் மணி என்பவரிடம் 400 ரூபாய் பணம் கொடுத்து 2 மது பாட்டில்களை வாங்கி வர தெரிவித்திருக்கிறார் இதில் ஒரு பாட்டிலை மணியிடம் கொடுத்துவிட்டு மற்ற மது பாட்டிலை மட்டும் இவர் எடுத்து வைத்துக் கொண்டார் கவிதா. எடுத்துச் சென்ற மது பாட்டிலில் சிரஞ்சியின் மூலமாக மதுவில் விஷம் கலந்து இருக்கிறார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு யாரோ மது பாட்டில் கொடுத்ததாக தெரிவித்து கணவருக்கு கவிதா அந்த மது பாட்டிலை கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே மது போதையில் இருந்ததால் அடுத்த நாள் குடித்து கொள்ளலாம் என்று அதனை எடுத்து வைத்துக் கொண்டார் சுகுமார்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை அவர் வேலைக்கு சென்றபோது இந்த மது பாட்டிலையும் எடுத்துச் சென்றுள்ளார். மதிய உணவு நேரத்தின் போது அந்த மதுவை குடிக்க முயற்சித்தார் அப்போது அவருடன் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த அவருடைய நண்பர் ஹரிலால் என்பவர் தனக்கும் இந்த மதுவில் பங்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் மதுவை அறிந்திய சற்று நேரத்தில் இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு அங்கே பரிசோதனை நடைபெற்றது. அப்போது நடத்திய பரிசோதனையில், இருவரும் குடித்த மதுவில் விஷம் கலந்து இருந்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

சற்று நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர் இதன் காரணமாக, சந்தேகமடைந்த மருத்துவர்கள் படாளம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியிடம் விசாரணை நடத்தினர்.அப்போது கள்ளக்காதலுக்கு தலையாக இருந்ததால் கணவனை கொலை செய்ததாக மனைவி ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

90 கண்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் திடீர் மாயம்..!! அதிர்ந்துபோன ரயில்வே நிர்வாகம்..!!

Wed Feb 15 , 2023
நாக்பூர் – மும்பை இடையே 90 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள சர்வதேச சரக்குப் பெட்டக முனைய டெப்போவில் இருந்து மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு 90 கன்டெய்னர்களுடன் சரக்கு ரயில் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று சென்றது. இந்த ரயிலில் அரிசி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனப் பொருள்கள் உள்ளிட்ட ஏற்றுமதிக்கான பொருட்கள் இருந்தன. இந்த ரயில் 4 முதல் 5 […]

You May Like