உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு..!! சந்தேகப்பட்ட மனைவி..!! தூக்கில் தொங்கிய இருவர்..!! அதிர்ச்சி

தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு பேசியதால் கல்லூரி மாணவியும், அவருடைய உறவினரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் அஸ்வத் (44). இவரது வீட்டின் அருகே மதுரா (24) என்ற பி.எட். படிக்கும் மாணவி வசித்து வந்துள்ளார். அஸ்வத்தும், மதுராவும் உறவினர்கள் என்பதால், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக அஸ்வத்தின் மனைவி லட்சுமியும், அவரது சகோதரரான சிக்கண்ணய்யாவும் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து, அஸ்வத்துடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுராவை சிக்கண்ணய்யா எச்சரித்துள்ளார்.

உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு..!! சந்தேகப்பட்ட மனைவி..!! தூக்கில் தொங்கிய இருவர்..!! அதிர்ச்சி

இதனால், மனம் உடைந்த மதுரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரா தற்கொலை செய்துகொண்டது பற்றி அறிந்ததும் அஸ்வத்தும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து இருவரிடன் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய திருடன்..!! பண மூட்டையுடன் கிடந்த சடலம்..!! பரபரப்பான பெங்களூரு..!!

Tue Oct 25 , 2022
திருட வந்த இடத்தில் பண மூட்டையுடன் திருடன் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர் சமந்தாராய் (42). மென் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு சென்றுள்ளார். இதனால் வீட்டில் யாருமில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, […]

You May Like