மது போதையில், சொத்து தகராறில்,.. தாயின் கழுத்தை அறுத்த மகன்.. தற்கொலை முயற்சி…!

மும்பையின் முலுண்டின் புறநகர் குடியிருப்பில் வசித்து வருபவர் 21 வயதான ஜெயேஷ் பஞ்சால். இவருக்கும் இவரது தாய்க்கும் சொத்து சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் நேற்று அவரது 46 வயதான தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் ஆத்திரத்தில் தாயை கொலை செய்ததால், தானும் இனி உயிருடன் இருக்க விரும்பாமல், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் முலுண்ட் ரயில் நிலையத்திற்கு வந்த ஜெயேஷ் பஞ்சால் அங்கு வந்துகொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது அவரை கவனித்த ரெயில்வே அதிகாரி ஒருவர், துரிதமுடன் செயல்பட்டு ஜெயேஷ் பஞ்சாலை காப்பாற்றினார்.

இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற ஜெயேஷ் பஞ்சால் தனது தாயை கொலை செய்ததை‌கூறினார். இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Baskar

Next Post

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Sun Jul 10 , 2022
டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like