வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

உலகில் ஒரே ஒரு நாடு மட்டும், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறுகிறது.. எந்த நாடு தெரியுமா..?

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் நிலையில், தங்கள் நாட்டில் மட்டும் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது.

kim jong un

உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரம் ஸ்த்ம்பித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியுள்ளது. சுமார் 2 லட்சட்த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் அங்கு பாதிக்கப்பட்ட 80,000 பேரில் சுமார் 60,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா உருவான ஹுபேய் மாகாணத்தில் கடந்த 3 மாதங்களில், முதன்முறையாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

corona ani 505 120320101408

எனினும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் ஒரே ஒரு நாடு மட்டும் தங்கள் நாட்டில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளது. எந்த நாடு என்று கேட்கிறீர்களா..? வடகொரியா தான் தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்நாடு அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுடனான அனைத்து எல்லைகளை முதலில் மூடியதாகவும், அந்நாட்டுடனான வர்த்தகத்தை தடை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் உள்ள அனைவரும் 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக தான் வடகொரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் அந்நாட்டின் பியோங்யாங் பகுதியில் புதிய மருத்துவமனை ஒன்றையும் கட்ட கிம் உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

kim jong un

மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள வடகொரியாவில் எப்படி கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கொரோனா விவகாரத்தில் சில நாடுகள் தவறான புள்ளிவிவரங்களை தருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளை அவர்கள் உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே சீனாவில் இருந்து வடகொரியா திரும்பிய கொரோனா பாதித்த நபரை அந்நாட்டு அதிபர் சுட்டுக் கொன்றதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தங்கள் நாட்டில் கொரோனா பரவுதலை தடுக்க கிம் இந்த உத்தரவை பிறப்பித்தாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒருவேளை அந்நாட்டில் கொரோனா பரவாமல் இருப்பதற்கு இது தான் காரணமோ..?

1newsnationuser1

Next Post

தளபதி 65 படத்தை இயக்கப் போவது இவர் தான்.. அதுவும் விஜய்யின் பிளாக்பஸ்டர் படத்தின் 2-வது பாகம்.?

Thu Mar 19 , 2020
தளபதி 65 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்த பிளாக்பஸ்டர் படத்தின் 2-வது பாகமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக […]
விஜய் 65 பட ஒப்பந்தம் உறுதியானது… படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் இவ்வளவா?

You May Like