குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்வு.. அரசு தகவல்..

அரசு மருத்துவமனைகளில் குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..

குடும்பக்கட்டுப்பாடுக்கு பின் கர்ப்பமானதால் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் இன்று அரசாணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.. அப்போது, அரசு மருத்துவமனைகளில் குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதே போல் குடும்பத்துக்கான இழப்பீடு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.. மேலும் குடும்ப கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.30,000-ல் இருந்து ரூ.60,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஆன்லைன் ரம்மியால் அதிகரிக்கும் தற்கொலைகள்... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு...!

Sat Jul 16 , 2022
கோவை நகர ஆயுதப் படை காவல் துறையில் பணிபுரிபவர் காளிமுத்து (29). இவர் கடந்த 2013-ஆம் வருடம் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள மேலத்துலுக்கன்குளம் ஆகும். காளிமுத்து சாலை தில்லை நாயகி (25) என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோவை, காந்திபுரத்தில் அரசு பொருட்காட்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தில் பாதுகாப்புப் […]

You May Like