இந்தியாவில் ஜூலை முதல் வாரத்தில் கொரானா பாதிப்பு உச்சத்தை அடையும் எனவும், தொற்றால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரை உயிரிழப்பர் எனவும் தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரானா இறப்பு ஒற்றை இலக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை எனவும், ஜூலை துவக்கத்தில் உச்சத்தை அடையுமெனவும் தெரிவித்தார். பல்வேறு ஆய்வு மாதிரிகளின் முடிவுகள் மற்றும் மற்ற நாடுகளில் கொரானா பாதிப்பு எப்படி உச்ச நிலையை அடைந்து பின்னர் குறைந்தது என்ற தரவுகளின் அடிப்படையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 4 முதல் 6 லட்சம் பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்படுவர். அதில் சராசரியாக 3 சதவீதம், அதாவது 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பர் என அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணை பேராசிரியர் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இந்தியாவில் கொரானா முடிந்த பின்பே, இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியவருமென்றார். குறிப்பிட தரவுகளின் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. தன்னை பொறுத்தவரை, வயது கட்டமைப்பை பொறுத்தவரை இத்தாலி அல்லது அமெரிக்காவை விட இந்தியாவில் இளைஞர்கள் அதிகமாக இருக்கின்றனர் என பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரானா தொற்றால் இறக்க வாய்ப்பு அதிகம் இருப்பதற்கு இந்தியா மற்றும் உலகளவில் சான்றுகள் உள்ளன. இந்தியாவில் கொரானா தொற்றால் இறந்தோரில் 50 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். மக்கள்தொகை அடிப்படையில் ஒப்பிடுகையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் அமெரிக்காவில் 22.4 % ஆகவும், இந்தியாவில் 9.9 % ஆகவும், பிரிட்டனில் 24.1 % பேரும், இத்தாலியில் 29.4 % பேரும் உள்ளனர். ஆரம்பகட்ட ஊரடங்கு காரணமாக, இந்தியாவில் நிரீழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற அதிக ஆபத்து கொண்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். குறைந்த இறப்புக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என, ஐதராபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஹெல்த் இயக்குனரும், பேராசிரியருமான ஜி.வி.எஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.