வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை எங்க நாட்டில் கொரோனா இல்லை! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் உலகின் பயங்கரமான காடு.. இங்கு மக்கள் செல்ல பயப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா..? சிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்.. பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? பயனுள்ள தகவல்.. ஹனி ட்ராப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த கும்பல்.. 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது.. டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் போதும்.. உங்களுக்கு ரூ.35,000 சம்பளம்.. எந்த நிறுவனத்தில் தெரியுமா..? பேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்.. வாகன ஓட்டிகள் இனிமே இதற்கும் அபராதம் செலுத்த வேண்டும்.. காவல்துறை எச்சரிக்கை..

தொடர்ந்து 7-வது நாளாக 9,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று.. இந்தியாவில் மொத்த பாதிப்பு எவ்வளவு..?

இந்தியாவில் தொடர்ந்து 7-வது நாளாக 9,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.66 லட்சமாக அதிகரித்துள்ளது.

 9,000 பேருக்கு மேல்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 9,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,66,598-ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 7வது நாளாக 9,000 பேருக்கு மேல் நோய் தொற்று உறுதியாகி வருகிறது. நேற்று மட்டும் 331 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 7,466-ஆக அதிகரித்துள்ளது. எனினும் 1,29,917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தவர்கள் வீதம், 48.46% -ஆக உள்ளது. சுமார் 1,21,000 பேர் கொரோனாவிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 88,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், சுமார் 44,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Kerala Coronavirus PTI

தமிழகத்தில் 33,229 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், இந்த பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதேபோல் டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் 20,000 பேருக்கு மேல் கொரோனா உறுதியானதால், இந்த மாநிலங்கள் முதல் 5 இடத்திற்குள் உள்ளன.

1newsnationuser1

Next Post

4 லட்சத்தைத் தொட்டது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!

Tue Jun 9 , 2020
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தொட்டுள்ளது. கொரோனாத் தொற்று 2019ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இந்நகரைச் சேர்ந்த 55வயது முதயவர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வேகமாகப் பரவிய நோய் இன்று உலகம் முழுவதும் 209க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட […]
202005050922560310 Tamil News Indias coronavirus postive death toll rises to 1568 SECVPF

You May Like