
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில் இந்தியா முழுவதும் நிர்கதியாக சாலையில் நின்றவர்கள் தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். சொந்த மாநிலத்தை விட்டு பிழைப்பினை தேடி வந்த அவர்கள் கொரோனாவின் காரணமாக மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர்.
இந்த நிலையில் தான் மாநில அரசுகள் அவர்களுக்கென தனியாக ரயில்கள், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி சொந்த ஊர் செல்ல வழிவகுத்து கொடுத்தனர். பலர் நடந்தே சொந்த மாநிலத்திற்கு சென்றதையும் நாம் பார்த்தோம்.

அவ்வாறு பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளுக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமையினை அறித்து புனர்வாழ்வு மற்றும் வேலைவாய்ப்புக்கு முழுமையான வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பீகாரில் இருந்து தங்களது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெற்றுவருகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு மாநிலம் மேற்கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதே நிதர்சன உண்மை.