தமிழ்நாட்டில் இன்று இந்த 3 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

1newsnationuser6

Next Post

MSc முடித்த நபர்களுக்கு BOB வங்கியில் வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Thu Feb 1 , 2024
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அனுபவம் பொறுத்து மாத […]

You May Like