இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா பாதிக்காத 25 மாவட்டங்கள்.. மத்திய அரசின் பட்டியல்.. தமிழக மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதா..?

கடந்த 14 நாட்களில் கொரோனா பாதிக்காத 25 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

corona-1

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே போல் நேற்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 273 லிருந்து 308 ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை 857 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 1,154 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த 3வது மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 1173 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus

இந்நிலையில் கடந்த 14 நாட்களில் இந்தியாவில் உள்ள 25 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட உறுதியாக வில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதார இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்த தகவலை இன்று தெரிவித்தார். ஆனால் இந்த பட்டியலில் ஒரு தமிழக மாவட்டம் கூட இடம்பெறவில்லை.

கொரோனா பாதிக்காத 25 மாவட்டங்கள் :

சத்தீஸ்கர் : ராஜ் நந்த் கவுன், துர்க், பிலாஸ்பூர்.
மகாராஷ்டிரா : கோண்டியா
கர்நாடகா : தவாங்கிரி, குடகு, தும்குரு, உடுப்பி
கோவா : தெற்கு கோவா
கேரளா : கோட்டயம், வயநாடு
மணிப்பூர் : மேற்கு இம்பால்
மிசோரம் : அயிஸ்வால் வெஸ்ட்
பஞ்சாப் : எஸ்.பி.எஸ் நகர்
பீகார் : பாட்னா, நாளந்தா. முங்கெர்
ராஜஸ்தான் : பிரதாப்கர்
ஹரியானா : பானிபட், ரோதக், சிர்ஸா
உத்தர்கண்ட் : பவுரி கர்வால்
தெலங்கானா : பத்ராதரி கோதகுடெம்

யூனியன் பிரதேசங்கள் :

புதுச்சேரி : மாஹே
ஜம்மு காஷ்மீர் : ரஜோரி

1newsnationuser1

Next Post

அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும்...பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்...

Mon Apr 13 , 2020
ஊரடங்கு உத்தரவான இந்த நேரத்தில் யாரும் பசி, பட்டினியை எதிர்கொள்ளகூடாது எனவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு சோனியா காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், யாரும் பட்டினியை எதிர்கொள்ளக் கூடாது எனவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். […]
அசாதாரண நிலை

You May Like