விழுப்புரத்தில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, தப்பிக்க முயன்றவனை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த பாத்திரப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வடிவேலன் என்பவருக்கும், திண்டிவனத்தில் உள்ள மரக்காணம் சாலை இந்திரா நகர் பகுதியை சார்ந்த பெண்மணிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயம் நடைபெற்று திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயத்திற்கு பின்னர் இருவரும் பேசிவந்த நிலையில், தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது ஆசை வார்த்தை கூறி வடிவேலன் பெண்ணை உல்லாசத்திற்கு இணங்க வைத்த நிலையில், இதனால் பெண்மணி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை பெண்மணி தனது வருங்கால கணவரான வடுவேலனுக்கு தெரியப்படுத்தவே, பல்வேறு காரணங்களை கூறி கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி அந்த பெண்ணிடம் இருந்து விலக முயற்சி செய்துள்ளான்.
இதனால் திருமணத்தில் தடை ஏற்பட்ட நிலையில், உறவினர்களிடம் பேசியும் பலன் இல்லை. இதனையடுத்து பெண்மணி இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வடிவேலனை கைது செய்துள்ளனர்.