சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு …

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நேற்று புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவாரமாக தீபாவளியை நேற்று கொண்டாடினர். கொரோனா காலக்கட்டம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகள் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து மிகச் சிறப்பான பண்டிகையாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகை ஒட்டி பட்டாசு வெடித்ததால் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காற்றில் நுண்துகள்களின் அளவு 109 என இருந்த அளவு நேற்று மாலை 4 மணியளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பான நிலையில் இருந்த காற்று மாசுபாடு மோசமான நிலைக்கு தரம் குறைந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. மணலி , ஆலந்தூர் , அரும்பாக்கம் வேளச்சேரி , எண்ணூர் , ராயபுரம் , பெருங்குடி , கொடுங்கையூீர் ஆகிய இடங்களில் காற்றின் மதரம் அதிகளவு மாசு அடைந்ழதுள்ளதாக குறிப்பாக மணலி, ராயபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் அதிக அளவு குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
தீபாவளியின் போது இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே பட்டாசு வெடித்தனர். யாரும் கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை. பட்டாசு வெடிப்பதை குறைத்தால் மாசு மீண்டும் பழை நிலைக்கே திரும்பும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Next Post

கள்ளக்காதல் விவகாரம்.. கண்டித்த போதும் கேட்காத காதலனுக்கு கட்டிவைத்து நிகழ்ந்தேறிய கொடூரம்.!

Tue Oct 25 , 2022
கள்ளக்காதல் விவகாரத்தில் எடப்பாடி அருகே தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி செந்தில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (57) இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பரது மனைவி கமலாவுக்கும்(56), முருகனுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்து கொண்ட கமலாவின் மகன் கார்த்தி, மருமகள் சுமதி ஆகியோர், தாயை கண்டித்துள்ளனர். அதனை சிறிதும் […]

You May Like