அசத்தல் அறிவிப்பு…! வேலைவாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு ரூ.15 லட்சமாக மானியத் தொகை உயர்வு…!

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEG திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ ,மானியத்தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம்‌ வரை பெறலாம்‌.


ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்‌ NEEDS திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்‌. எஸ்‌.சி., எஸ்‌.டி., எம்‌.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்‌ 45 வயது வரை கடன்‌ பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி திட்டத்தில்‌பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும்‌, எஸ்‌.சி., எஸ்‌.டி, எம்‌.பி.சி., பி.சி.,சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்க்கு 55 வயது வரையிலும்‌ வங்கியில்‌ விண்ணப்பிக்க தகுதிஎன அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG 20230608 053952

Vignesh

Next Post

அரசின் ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்...! ஓபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு...!

Thu Jun 8 , 2023
ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசின்‌ நிறுவனமான ஆவின்‌ நிறுவனத்திலேயே குழந்தை தொழிலாளர்கள்‌ பணி அமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள்‌ வெளிவந்துள்ளன. தி.மு.க. அரசின்‌ இந்தச்‌ செயல்‌ வேலியே பயிரை மேய்வதுபோல்‌ உள்ளது. அரசின்‌ இந்த சட்டவிரோதமான செயல்‌ கடும்‌ கண்டனத்திற்குரியது. தனியார்‌ நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசே […]
OPS MKS

You May Like