
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனாவின் பாதிப்பில் இந்தியா 4 வது இடத்திற்கு வந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக இதனை என்ன நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தொடர் ஆலோசனை நடத்திவருகின்றனர். மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகமாகும் பட்சத்தில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வருவது என்பது முடியாத காரியம்.

இந்த நிலையில் ல் கொரோனாவின் தாக்குதலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வருகின்ற ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.