IND vs WI Test!… அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ்!… முதல்நாள் ஆட்டத்தில் 80 ரன்கள் சேர்த்தது இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.


வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியில் முதல் போட்டியாகும். இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின்,
தொடக்க வீரர்கள் டேகனரின் சந்தர்பால் 12 ரன்களும் , கேப்டன் கிரேக் பிராத்வைட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரேமன் ரைபர் 2 ரன்கள் , ஜெர்மைன் பிளாக்வுட் 14 ரன்கள் , ஜோசுவா டா சில்வா 2 ரன்கள் , ஜேசன் ஹோல்டர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அனியில் சிறப்பாக விளையாடிய அலிக் அதானாஸ் 47 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , ஷார்துல் தாகூர் , சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா , அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.தொடர்ந்து நிலைத்து ஆடி பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்கள் , ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்துள்ளனர்.

KOKILA

Next Post

ஆசிய கோப்பை 2023!... இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது!... இறுதியானது அட்டவணை!... பிசிசிஐ நிர்வாகி அருண் துமால் தகவல்!

Thu Jul 13 , 2023
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்றும் அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐயின் நிர்வாகி அருண் துமால் தகவல் தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது. ஆசிய கோப்பை தொடரில் 13 போட்டிகளில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என […]
india vs pak world cup

You May Like