#Breaking: இந்தியாவில் உச்சத்தில் செல்லும் கொரோனா வைரஸ் பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,044 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 56 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,30,071 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,30,63,651 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,660 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,99,71,61,438 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22,93,627  லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: Monkey pox: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி…! தடுக்க ஒரே வழி இதை கடைபிக்க வேண்டும்….!

Vignesh

Next Post

இனி கண்ணாடிகள் தேவையில்லை.. புதிய கண் சொட்டு மருந்துக்கு அமெரிக்க அரசு ஒப்புதல்..

Sat Jul 16 , 2022
கண் பார்வையை மேம்படுத்தும் புதிய கண் சொட்டு மருந்துக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.. அமெரிக்காவின் FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) ஒரு புதிய வகை கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வயது தொடர்பான பார்வையை மேம்படுத்தும் நோக்கில் கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கண் பார்வை பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. Vuity என்று அழைக்கப்படும், சொட்டு […]

You May Like