இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்து உள்ளது உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 லிருந்து 5,164 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 லிருந்து 86,984 ஆக உயர்ந்து உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 8,000 ஐத் தாண்டியது இதுவே முதல் முறை.