இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

இந்தியாவில் மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி

இந்தியாவில் மே-3 வரை நாடு தழுவிய ஊரடங்கு நீடிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

modi n


சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நாட்டு மக்கள் விட்டிலேயே முடங்கி இருந்தனர். ஆனாலும், இந்த சமயத்தில் இ தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால், பஞ்சாப், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என மாநில அரசுகள் அறிவித்தன.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 21-வது நாளான இன்று பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, கொரானாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது. ஆனாலும், கொரானாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழ் புத்தாண்டை கூட வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார்.

modi speech about corona

இந்தியாவில் முதல் நபருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரானாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது

உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கொரானோ பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை விட நாட்டின் நலனே முக்கியம். பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவை சந்தித்தாலும் உயிரிழப்புகளை தடுத்து வருகிறோம் என்றார்.

மற்ற எதையும் விட மக்களை உயிர் முக்கியம் என்பதால் மாநில அரசுகளின் வேண்டுகோள் மற்றும் வல்லுநர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும், அந்த பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட அவர்களை கூடுதல் கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

1newsnationuser4

Next Post

பிரதமர் மோடியின் அந்த 7 கோரிக்கைகள் என்ன?..

Tue Apr 14 , 2020
ஊரடங்கு சமயத்தில் இந்திய மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இன்று காலை இந்திய மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரானா தடுப்பு நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபடுவதாக அறிவித்தார். ஏற்கனவே, தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஏப்.30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மே 3 வரை ஊரடங்கு பிறப்பித்தது ஏன் என கேள்வி எழுந்தது. […]
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

You May Like