நாடு முழுவதும் மக்களுக்கு ‘200 கோடி’ தடுப்பூசிகள் செலுத்தி சாதனையை படைத்துள்ளது இந்தியா…!

‘200 கோடி’ கொரோனா தடுப்பூசிகள் என்னும் முக்கிய சாதனையை படைத்துள்ளது இந்தியா.

ஒரு வரலாற்று சாதனையாக, இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசி இயக்கம் 200 கோடி என்னும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. நேற்று  மதியம் 1 மணி வரையிலான தற்காலிக நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 2,00,00,15,631 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,63,26,111 அமர்வுகள் மூலம் இது எட்டப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை “அளவிலும் வேகத்திலும் இணையற்றது” என்று கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் 18 மாதங்களில் இந்த சாதனையை நாடு படைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த அசாதாரண சாதனை வரலாற்றில் பொறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், மனிதகுலத்தின் சேவையில் புதிய சாதனையை ஏற்படுத்துவதில்  கடின உழைப்பு, தொலைநோக்கு  மற்றும் கண்டுபிடிப்புகளை அளித்த சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read; “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!

Vignesh

Next Post

வங்கி வேலை தேடும் நபர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை அறிமுகம்…! 1,010 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்

Mon Jul 18 , 2022
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Clerk பணிகளுக்கு என 1010 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் […]

You May Like