இந்தியாவிற்கு நட்பு பாராட்டவும் தெரியும், பதிலடி கொடுக்கவும் தெரியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கொரோனா, இந்தியா – சீனா எல்லை விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். லடாக் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் “ நாட்டின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலகம் கண்டது. லடாக்கில் இந்திய நிலப்பரப்பில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. ஒருவரோடு எப்படி நட்பு பாராட்டுவது என்று இந்தியாவிற்கு தெரியும். அதேவேளையில் நம்மை சீண்டும் ஒருவரை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுக்கவும் இந்தியாவுக்கு நன்றாக தெரியும்.
தங்கள் தாய் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் நிரூபித்து விட்டனர். லடாக்கில் தங்கள் இன்னுயிரை நீத்த, வீரர்களுக்கு இந்தியா தலை வணங்குகிறது. அவர்கள் தியாகம் எப்போது நினைவுக்கூறப்படும்.

பீகாரைச் சேர்ந்த தியாகி குண்டன்குமாரின் தந்தை, நாட்டைப் பாதுகாப்பதற்காக தனது பேரன்களையும் ஆயுதப் படைகளுக்கு அனுப்புவேன் என்று கூறினார். ஒவ்வொரு தியாகியின் குடும்பத்தினரின் மனநிலையும் இதுதான். இந்த குடும்பங்களின் தியாகம் போற்றத்தக்கது” என்று தெரிவித்தார்.