இந்திய சீன எல்லையில் ஏற்ப்பட்ட தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ள சூழலில் மத்திய அரசு சீன நிறுவனமான டாடா, எல் அண்ட் டி போன்ற நிறுவனத்துடன் ரூ.1,126 கோடிக்கு கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்தியா- சீனா இடையே கிட்டத்தட்ட 3,488 கிமீ வரை எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த எல்லை முழுமையாக விரிவுப்படுத்தப் படத்தால் இரு நாடுகளுக்கும் இடையே அடிகடி பிரச்சனை எழுகிறது. இதில் குறிப்பாக கடந்த மே 5ம் தேதி பாங்கோங் சோ ஏரியை ஒட்டிய பகுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்ப்பட்டது. பின்பு 9ம் தேதி மீண்டும் நாதுலா பகுதியில் சண்டை ஏற்ப்பட்டது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் உருவானது.

இதற்கு தீர்வு காண இரு நாட்டு உயர் அதிகாரிகளும் தற்போது பேச்சு வார்த்தை நடத்திவரும் இந்த நிலையில் கடந்த 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் நமது இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் பலர் படுகாயகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சீன இராணுவத்திலும் உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் சீனாவின் இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியர்கள் சீன பொருட்களுக்கு தடை விதிக்க கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க டெல்லி-மீரட் சாலை திட்டத்தின் ஒரு பகுதியான அசோக் நகர்- சாஹிபாபாத் இடையே 5.6 கிமீ நிலத்தடி பாதையை அமைக்க சீன ஷாங்காய் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்ய கோரி பலரும் எதிப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.