#Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..? எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்!

கொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சிய இந்தியா.. 2.35 லட்சத்தை கடந்த பாதிப்பு.. தற்போது உலகளவில் 6-வது இடம்..

கொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சி, தற்போது உலகளவில் இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா பாதிப்பில்

கடந்த ஜனவரி 30-ம் தேதி கேரளாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதியானது மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. அதன்பிறகு மார்ச் மாதத்தில் தொற்று எண்ணிக்கை 1000ஐ தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு கடந்த மே 18-ம் தேதி 1 லட்சத்தை கடந்தது.

அதன்பிறகு நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் கடந்த 2-ம் தேதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சராசரியாக தினமும் 8,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் 7-ம் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,36,184-ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி தற்போது இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை மொத்தம் 6,649 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,13,233 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். எனினும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு
.

இதனிடையே உலகளவில் சுமார் 68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி என்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. எனினும் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 19 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

Kerala Coronavirus PTI

சுமார் 6.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரேசில் 2-வது இடத்திலும், 4 .4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரஷ்யா 3-வது இடத்திலும் உள்ளது. கொரோனா பாதிப்பில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருடன் ஸ்பெயின் 4-வது இடத்திலும், 2 லட்சத்து 83 ஆயிரம் பேருடன் பிரிட்டன் 5-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியானதால் இந்தியா தற்போது 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா பாதிப்பில் இந்தியா இன்று ஆறாவது இடம்... இது கவலைப்பட வேண்டிய நேரம்...

Sat Jun 6 , 2020
உலக நாடுகளில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியது அனைவரையும் பதற வைக்கிறது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி கடையில் தொடங்கிய பரவல் ஆரம்பத்தில் சொற்ப எண்களில் இருந்தது. இதனை பரவாமல் தடுக்க நான்கு கட்ட ஊரடங்கு முறையும் கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் அங்கங்கே சமூக பரவாலால் நோய் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஊரடங்கும் பலரை பாதித்துள்ளது. பல புலம் […]
HEALTH CORONAVIRUSINDIA

You May Like