இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 13,586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,80,532 -ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 336 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 12,753-ஆக அதிகரித்துள்ள்ளது. இதுவரை 1,63,248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 2,04,711 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு, 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சுமார் 54,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,000 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு இதுவரை 5,751 பேர் உயிரிழந்துள்ளனர். 52,334 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தமிழ்நாடு 2-வது இடத்திலும், 49,979 பாதிப்புகளுடன் டெல்லி 3-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.