ஜடேஜா வெறியாட்டம்…..! திணறி போன ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்…..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி 139 ரகளை எடுப்பதற்கு முன்பாகவே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வந்தது.

இதனை தொடர்ந்து, அஸ்வின், அக்ஷப் பட்டேல் ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடிய ரன்களை சேர்த்தன. இந்த ஜோடி 8வது விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்தது தொடர்ச்சியாக மிகவும் சிறப்பாக விளையாடிய அக்ஷர் பட்டேல் 74 எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

கடைசியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி ஒரு ரன் பின்தங்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய வின் தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன் டார்க்மர்பி உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டையும், கம்மின்ஸ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆகவே 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் ஆட்டநேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61வது சேர்த்து இருந்தது.

இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியுடன் ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆஸ்திரேலியா அணி திண்டாடி போனது. அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சுழற் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களை திக்கு முக்காட வைத்த ஜடேஜா அதிரடியாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அஸ்வின் 3️ விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் ஆஸ்திரேலியா அணி 113 ரன் களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 115 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எளிதாக வெற்றி பெறும் இலக்குடன் இந்திய அணி தன்னுடைய பேட்டிங்கை தொடர்ந்து வருகிறது.

Next Post

தூய்மை பணியாளரிடம் அத்துமீறிய அரசு அலுவலர்……! வெடித்தது போராட்டம்…..!

Sun Feb 19 , 2023
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் உயிரிழந்த பிறகு அவருடைய வேலை கருணையின் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு வழங்கப்பட்டது. அந்த விதத்தில் அந்த பெண் திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த பகுதியில் உள்ள பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக நவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் தூய்மை பணியாளரான அந்த பெண்ணுக்கு ஆபாசமாக […]

You May Like