வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஆறு மாதத்திற்கு பின் சரிவை கண்ட அன்னிய செலவாணி இருப்பு..!

நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின் தற்போது சரிவைக் கண்டு உள்ளது.

Tamil News large 2507050

மார்ச், 13ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 48 ஆயிரத்து 189 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய மதிப்பில், 36.14 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன், இருப்பு அதிகபட்சமாக, 48 ஆயிரத்து 723 கோடி டாலராக இருந்தது. ஆனால், தற்போது அது குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, தொடர்ந்து, அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. ஆனால், மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், முதல் முறையாக சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ம தெரிவித்திருப்பதாவது:கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு 535 கோடி டாலர் சரிவைக் கண்டது.


மார்ச், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது. இதற்கு முன், கடந்த ஆண்டு, செப்டம்பர் 20ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவு ஏற்பட்டது. அப்போது, அதற்கு முந்தைய வார இருப்பான, 42 ஆயிரத்து 858 கோடி டாலர் என்பதிலிருந்து, 38.8 கோடி டாலர் சரிந்தது. தற்போதைய சரிவுக்கு, வெளிநாட்டு பணத்தின் மதிப்பு குறைந்தது காரணமாக அமைந்தது. வெளிநாட்டு பண மதிப்பானது, 378 கோடி டாலர் குறைந்து, 44 ஆயிரத்து, 736 கோடி டாலராக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய், இதுவரை காணாத வகையில், 1 டாலருக்கு, 75.20 ரூபாய் என மதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தைகளிலிருந்து, கடந்த வியாழனன்று மட்டும், 4,623 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.மேலும், மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் குறைந்தது. தங்கத்தின் இருப்பு மதிப்பு, 153 கோடி டாலர் குறைந்து, 2,947 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 2.21 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனா பாதிப்பு; உலகளவில் 3 லட்சத்தை தாண்டியது..!

Sun Mar 22 , 2020
கொரோனா வைரசால் உலகளவில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனா மற்றும் இத்தாலியில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள கொரானா நோய் தற்போது 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் உருவான சீனாவை விட, இத்தாலி அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் கொரானா, இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் […]
corona 3

You May Like