இந்திய விமானப்படையின் ஆட்சேர்ப்பு பேரணி, புதுச்சேரியில் டிசம்பர் 10 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

இந்திய விமானப்படை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திருமணமாகாத ஆண் இந்திய குடிமக்களுக்கு விமான வீரர்களாக சேர வாய்ப்புகளை வழங்குகிறது. அதற்கான ஆட்சேர்ப்பு முகாம் டிசம்பர் 10 முதல் 19 வரை புதுச்சேரியின் இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெறும்.
தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி
17 ஜனவரி 2000 முதல் டிசம்பர் 30, 2003 வரை பிறந்தவர்கள் ஆட்சேர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். . ஆர்வமுள்ளவர்கள், நவம்பர் 28, 2020 அன்று www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில், பார்வையிட்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.