இந்திய சீன எல்லையில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் ஏற்ப்பட்ட மோதலில் இந்திய இராணுவத்தை சேர்ந்த 20 பேர் மரணமடைததை தொடர்ந்து தமிழக வீரர் பழனியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லையில் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனியின் உடல் இன்று அதிகாலை தனி விமானம் மூலம் மதுரை வந்ததடைந்து, பின்பு ஆம்புலன்ஸ் மூலம் அவர் சொந்த ஊரான கடுக்கலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஊர் எல்லையில் மலர்களால் அலங்கரிப்பட்ட இராணுவ வாகனத்தில் பழனி அவர்களின் உடல் மாற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு இராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்று 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தமிழக முதல்வர் அறிவித்த நிதியுதவி ரூ.20 லட்ச ரூபாய்க்கான காசோலையை பழனியின் குடும்பத்தாரிடம் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் போன்றோரும் பழனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.