சென்னை VS ராஜஸ்தான்… வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார்? பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைதியாக ஓய்வு எடுக்கிறார் நடிகர் இர்பான் கான்..! எஸ்.பி.ஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா… 24 மாதம் தவணை கட்ட தேவையில்லை? ஆனா ஒரு கண்டிஷன்… 28 வயது காதலியை கரம்பிடித்த 67 வயது திமுக நிர்வாகி..! டிரெண்டாகும் #CoupleChallenge 100% சிரிப்பு உறுதி.. சிஎஸ்கே அணியின் ஷூட்டிங் வீடியோ.. அட்டகாசம் செய்யும் வீரர்கள்.. நவம்பர் 1ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு!! காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..!

சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமெனில், அதை முதலில் இந்திய ராணுவம் தான் செய்ய வேண்டும் ..

இந்திய ராணுவத்தில் சீனப் பொருட்கள் பயன்படுத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென நிதி ஆயோக் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

indianarmy

இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில், கடந்த 15-ம் தேதி, இரு நாட்டு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 35 க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தங்கள் நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு குறித்தோ உயிரிழப்பு குறித்தோ சீனா அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

இதனையடுத்து சீன பொருட்களை இந்தியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் #Boycottchineseproducts என்ற ஹேஷ்டாகும் இந்திய அளவில் ட்ரெண்டனது. இதனையே சீன பொருட்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே நிர்வாகமும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவுசெய்துள்ளன.

மேலும் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் இந்திய ரயில்வே ரத்து செய்தது. இந்த சூழலில், உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

download 45

மேலும் சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராணுவத்தில் சீன பொருட்களை பயன்படுத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென நிதி ஆயோக் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினரும், டிஆர்டிஓ முன்னாள் தலைவருமான வி.கே.சரஸ்வத் பேசிய போது “பாதுகாப்பு கவசம் போன்ற முக்கிய பொருட்களின் உற்பத்தியில் சீன முலப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என ஏற்கனவே நாங்கள் கூறிவிட்டோம். மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும்படி ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டோம்.

sarru

ஆனால் தற்போது நிலவும் பதற்றமான சூழலில் சீனாவிலிருந்து மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கருதுகிறேன். தொலைத்தொடர்பு, பாதுகாப்பு கவசம் போன்ற முக்கிய துறைகளில் சீன மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கக்கூடாது” என்று கூறினார்.

ஏற்கனவே இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கவசங்கள் சீன மூலப் பொருட்களை வைத்தே தயாரிக்கப்படுகின்றன. 2017ஆம் ஆண்டில் 1.86 லட்சம் பாதுகாப்பு கவசங்களுக்காக எஸ்எம்பிபி பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த கவசங்கள் தற்போது அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், இந்நிறுவனத்தை அரசு தற்போது தொடர்புகொண்டு ஆலோசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மஞ்சள் காமாலை, புற்றுநோய்களுக்கு மருந்து கரும்பு சாறு!!!!!

Mon Jun 22 , 2020
நமது நாட்டில் பெரும்பாலும் கோடை வெயிலின் தாகம் கரும்பு சாறில் அடங்கும். பொங்கல் நேரத்தில் கரும்பு விற்பனை களைக்கட்டும். பிரசிலுக்கு அடுத்து உலகில் கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருப்பது இந்தியா தான். ஏன் இவ்வளவு உற்பத்தி, விற்பனை? எல்லாம் அதிலிருக்கும் நன்மைகளுக்காகவே. கருப்பு சாறில் என்னென்ன மருத்துவ குணாதீசியங்கள் உள்ளது என்பதை இங்கு பார்ப்போம். கரும்பு சாறு அதிக ஊட்டச்சத்துகள் கொண்டுள்ளது. தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, துத்தநாகம், […]
1543905344 6983

You May Like