ரகசிய சுரங்கப்பாதை மூலம் இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வீடியோ ஆதாரம்.. பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? கமல் கேள்வி.. மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..?

திடீர் முடிவு..உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோசுக்கு இந்தியா அனுமதி

பிரம்மோஸ் ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு இந்திய ராணுவம் அதிரடி அனுமதி வழங்கி உள்ளது.

n1918428349315389ab642605908eafdb8cd384afc642e6dc189e535ba97283293bd6ca894

இந்திய ராணுவத்தில் இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மீடியம் ரேஞ்ச் வகை ஏவுகணைகள் ஆகும். இது சூப்பர் சோனிக் வேகத்தில் செல்ல கூடிய க்ரூஸ் ஏவுகணை வகையை சார்ந்தது.

உலகில் இருக்கும் ஏவுகணைகளில் அதிவேக க்ரூஸ் ஏவுகணை இதுதான். க்ரூஸ் ஏவுகணை என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் கட்டுப்பாட்டுடன் செலுத்த கூடிய guided வகை ஏவுகணைகள் ஆகும்.

இந்தியாவில் இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் ரஷ்யா – இந்தியாவின் கூட்டு தயாரிப்பில் உருவானது.

ரஷ்யாவின் p -800 onkis வகை ஏவுகணைகளை மையமாக வைத்து அதில் சில மாற்றங்களை செய்து இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்கோவா நதிகளை இணைத்து இதற்கு பிரம்மோஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

n191842834b5096e0dc296fbbc1c8eef86cdf7fea135a7064ad7009df403277b35a2db094d

பிரம்மோஸ் ஏவுகணை மொத்தம் மேக் 4 வேகத்தில் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது ஆகும். இந்த ஏவுகணையை பல வகையில் தாக்குதல் நடத்த பயன்படுத்தலாம். அதன்படி நீர்மூழ்கி கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை ஏவலாம். அதேபோல் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை ஏவலாம். நிலத்தில் இருந்தும் ஏவலாம். அதேபோல் கப்பல்களில் இருந்தும் கூட பிரம்மோஸ் ஏவுகணையையே ஏவ முடியும்.

இந்த நிலையில்தான் பிரம்மோஸ் ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு இந்திய ராணுவம் அதிரடி அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே பிரம்மோஸ் ஏவுகணைகளை கப்பல்களில் இருந்தும், நிலத்தில் இருந்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நீர்மூழ்கி கப்பலில் இருந்தும், விமானத்தில் இருந்தும் பயன்படுத்த பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

n19184283412f35b6b011dd3fd8a5016fce6f285604d5413686b184a74556bf1329d70daa0

இந்த நிலையில் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை விமானங்களில் இருந்து ஏவ இந்திய ராணுவம் அனுமதி அளித்துள்ளது. அதாவது போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை எடுத்து சென்று, இலக்கை நோக்கி அதை ஏவ முடியும். இப்படிப்பட்ட தாக்குதலுக்கு Air-launched cruise missile என்று பெயர். இதற்குத்தான் இந்தியா தற்போது அனுமதி அளித்துள்ளது.

சீனாவுடன் லடாக்கில் மோதல் இருக்கும் நிலையில் இந்தியா இதற்கு அனுமதி அளித்து உள்ளது.லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டை இந்தியா – சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

1newsnationuser4

Next Post

இந்தியா -சீனா மோதல் விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

Wed Jun 17 , 2020
டெல்லி: இந்தியா -சீனா மோதலையடுத்து எல்லைப்பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். லடாக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று, இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் […]
இந்தி

You May Like