“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

பொருளாதாரத்தை மீட்க இந்தியா சரியான பாதையில் செல்கிறது – பிரதமர் மோடி

பொருளாதாரத்தை மீட்க இந்தியா சரியான பாதையில் செல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சரியான

நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, இன்று 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். பஞ்சாப், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மோடி “ கடந்த 2 வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை இன்று உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வேன். எதிர்காலத்தில் திட்டங்களை வகுப்பதற்கு உங்களின் ஆலோசனை பயனளிக்கும்.

உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மற்ற நாடுகளை விட, இந்தியாவில் உயிரிழப்பு வகிதமும் குறைவாக உள்ளது.

modi 660 020620112211

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கொரோனாவை கட்டுப்படுத்த உதவியாக அமைந்தது. தற்போதைய நிலையில் வெளியே வரும் போது மாஸ்க் அணியாமல் வருவது சரியாக இருக்காது. கைகளை கழுவதும், சானிடைசர்களை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். மக்கள் வெளியே வர துவங்கியுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். ஒரு சிலர் அலட்சியப்படுத்தினால் கூட கொரோனாவுக்கு எதிரான போர் பலவீனமாகும்

எதிர்காலத்தில், கொரோனாவிற்கான இந்தியாவின் போராட்டம் ஆய்வு செய்யப்பட்டால், கூட்டாட்சியில் நாம் எப்படி இணைந்து செயல்பட்டோம் என்பது பற்றி நினைவு கூறப்படும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு குறு தொழில்கள், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை மீட்க இந்தியா சரியான பாதையில் செல்கிறது” என்று தெரிவித்தார்.

So much impact in the last six days in India

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தொடர்பாக முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஆளும் அதிமுக கட்சியின் எம்.எல்.ஏவுக்கு குடும்பத்துடன் கொரானா

Tue Jun 16 , 2020
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏவை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த கே. பழனி உள்ளார். இவர் ஊரடங்கு தொடங்கியது முதல் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்களை […]
தமிழகத்தில்

You May Like