ஒபாமா இடத்தை பிடித்த இந்திய வம்சாவளி பெண்…. ஹார்வர்ட் சட்ட இதழின் தலைவராக தேர்வு!

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வரும் இந்திய வம்சாவளி பெண், பல்கலைக்கழக சட்ட இதழின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1887ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியில், சட்டம் சார்ந்த தகவல்களை அளிக்கும் வகையில், பத்திரிகை ஒன்று நிறுவப்பட்டது. இந்தநிலையில், இந்த நிறுவனத்தின் 137வது தலைவராக இந்திய வம்சாவளி பெண் அப்சரா ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 136 ஆண்டுகால வரலாற்றில் இந்த பதவிக்கு வரும் முதல் இந்திய அமெரிக்க பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அப்சராவுக்கு வழங்கப்பட்ட இந்த பதவியில் அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொருளாதாரம், கணிதம் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்தையும் அப்சரா பெற்றுள்ளார். ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வரும் அப்சராவுக்கு, கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்பை புரிந்து கொள்வதில் ஆர்வம், கலைப் படைப்புகள் மற்றும் கலைப்பொருட்களைக் கண்காணிக்கும் மன்ஹாட்டன் மாவட்டத்தில் தொல்பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணிபுரிய வழிவகுத்தது என்று கிரிம்சன் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சட்டப் பள்ளியில் படிக்கும் போதே ஹார்வர்ட் மனித உரிமைகள் இதழ் மற்றும் தேசியப் பாதுகாப்பு இதழிலும் பணிபுரிந்துள்ள அப்சரா. தெற்காசியச் சட்ட மாணவர் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

இது பாம்புகளின் கோட்டை!... மனிதர்கள் செல்ல தடை!... எங்க உள்ளது தெரியுமா?

Wed Feb 8 , 2023
பிரேசிலில், உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழும் தீவு ஒன்று உள்ளது. இந்த அபாயகரமான பகுதிக்கு செல்ல மனிதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் இல்காடா குயீமடா கிராண்டு என்ற தீவு ஒன்று அமைந்துள்ளது. இது, பாம்புகளின் தீவு என்றே அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு காடுகளும், பாறைகளும் நிறைந்தது. சாவோபவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள […]

You May Like