ஒருவர் மீது உண்மையான காதல் தோன்றும்போது ஆண் ஆனாலும் பெண் ஆனாலும், அவரது முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தற்போதைய காலத்தில் யாரும் பொருட்படுத்தி கொள்வதில்லை. ஒருவர் தனது முந்தைய திருமண வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு கசப்பான சம்பவங்களால் அந்த உறவை முறித்துக் கொண்டு இருந்தாலும், உண்மையான அன்பு காரணமாக அவர்களை வாழ்க்கை துணையாக பலரும் தேர்வு செய்து கொள்வது சகஜமாகி விட்டது. அந்த வகையில், ஏற்கனவே திருமணமான பெண்களை தங்கள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி இன்று நாம் பேசப்போகிறோம்.

முதலாவதாக, இந்தியாவின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளராகவும் செயல்பட்ட இவர் செட்னா என்பவரை மணந்தார். செட்னாவின் முதல் திருமணம் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொருவர், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத். அவர் தன்னை விட ஒன்பது வயது மூத்த ஜெயந்தி என்ற பெண்ணை மணந்தார். இது ஜெயந்தியின் இரண்டாவது திருமணம் ஆகும்.

மூன்றாவது பெயர் இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். அவர் ஏற்கனவே திருமணமான முன்னாள் குத்துச்சண்டை வீரங்கணையான ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா முகர்ஜி முன்பு தனது முன்னாள் கணவருடன் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

நான்காவது பெயர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய். அவர் தனது நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக்கின் மனைவி நிகிதாவை திருமணம் செய்து கொண்டார். நிகிதா இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை விவாகரத்து செய்திருந்தார்