ரூ.19,900 ஊதியத்தில் அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு முடித்த நபர்கள் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஏழு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் கீழ் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாத ஊதியம் ரூ.19,900 வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணைப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.7.2022 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More info: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_30062022_MMS_ENG.pdf

Also Read: #4th Wave: முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்… இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும்..! ஆட்சியர் உத்தரவு…!

Vignesh

Next Post

கவனம்.. இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்காதீங்க.. இந்த பிரச்சனைகள் ஏற்படும்..

Sat Jul 2 , 2022
இந்த வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர்.. அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர்.. ஆனால் இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வளவு மோசமாக பாதிக்கும் தெரியுமா? உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்… மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது […]

You May Like