இந்திய செயற்கைக்கோள் கார்டோசாட் 2F மற்றும் ரஷ்ய செயற்கைக்கோள் கனோபஸ் ஆகியவை நேற்று மிக நெருக்கமாக வந்தன என ரஷ்யா தெரிவித்துள்ளது.

நாசாவின் கூற்றுப்படி விண்வெளியில் பூமியை சுற்றிவரும் சுமார் 2000 செயற்கைக்கோள்கள் செயலில் உள்ளன. அதை தவிர 10 செமீக்கும் அதிகமான 23 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட விண்வெளி குப்பைகள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்திய செயற்கைக்கோள் கார்டோசாட் 2F மற்றும் ரஷ்ய செயற்கைக்கோள் கனோபஸ் ஆகியவை நேற்று மிக நெருக்கமாக வந்தன என ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு செயற்கைக்கோள்களுக்கும் இடையில் 1 கிமீ தூரம் இருந்த போதிலும் சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டிற்கும் இடையில் 224 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்ததாக தெரியவந்துள்ளது. இது மிகவும் பயங்கரமானது என்றும், விண்வெளியில் ஒரு பயங்கரமான மோதல் தவிர்க்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகிரங்கமாக ரஷ்யா அறிவித்த போதிலும் நாசா தரப்பில் இருந்து எந்தவொரு செய்தியும் பகிரப்படவில்லை.