கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்திய வீரர்கள் இன்னும் பலரை சீன இராணுவம் கைது செய்து வைத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

கடந்த 15ம் தேதி இந்திய சீன எல்லை பகுதியான லடாக் கல்வான் பகுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. இதில் பேச்சு வார்த்தை நடந்த சென்ற இந்திய வீரர்கள் மீது சீன இராணுவம் தீடீர் தாக்குதல் நடத்தியது. கூர்மையான ஆணிகள், இருப்பு கட்டைகளால் தாக்கியதில் இந்திய வீரர்கள் 3 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு பின்னர் 2௦ பேர் என அறிவிக்கப்பட்டது. இந்திய இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியத்தில் சீன வீரர்கள் கிட்டத்தட்ட 40 பேர் வரை இறந்திருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலில் எந்த வீரரும் மாயமாகவில்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டாலும் தாக்குதல் நடந்த 3 நாட்களில் சீன இராணுவம் 1௦ இந்திய வீரர்களை விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வந்தது. முன்னுக்குப்பின் வரும் முரணாக தகவல்களால் மத்திய அரசை பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது தாக்குதலுக்கு பின் நடந்த்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்திய இராணுவத்தில் பலர் காணவில்லை எனவும் சீனா கைது செய்து வைத்திருந்தவர்கள் அனைவரையும் விட வில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. சீனா வேணுமென்றே வீரர்களை அனுப்ப தாமதம் காட்டுவதாகவும் செய்திகள் கசிகிறது.