ISI முத்திரையை தவறாக பயன்படுத்தி உணவு பொருட்கள்…! அதிகாரிகள் அதிரடி சோதனை…!

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மாற்று மின்னோட்ட மோட்டார் மின்தேக்கிகள் (Capacitors) பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் பற்றி, பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரியிலோ, BIS CARE APP செயலி மூலமோ அல்லது cnbo2@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’நீங்க ஹீரோயின் மாதிரி இருக்கீங்க’..!! ஆசையை தூண்டிய இன்ஸ்டா ப்ரண்ட்ஸ்..!! சடலமாக கிடந்த துணை நடிகை..!!

Tue Nov 8 , 2022
இன்ஸ்டா ரீல்ஸுக்கு அடிமையான பெண் ஒருவர் சினிமா வாய்ப்புத்தேடி சென்னை சென்று திரும்பிய நிலையில், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சித்ரா, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். உடன் வேலைப்பார்பவர்களும், […]
’நீங்க ஹீரோயின் மாதிரி இருக்கீங்க’..!! ஆசையை தூண்டிய இன்ஸ்டா ப்ரண்ட்ஸ்..!! சடலமாக கிடந்த துணை நடிகை..!!

You May Like