உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு.76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது

சித்திக் சிகிச்சைக்காக சென்று வந்த அனைத்து வழித்தடங்களிலும் மருத்துவமனைகளிலும் துரித பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தெலுங்கான அரசிற்கு கர்நாடக சுகாதாரத்துறை தகவல்”

640 Beta coronavirus COVID 19 2020 02 19 01 05 05

கர்நாடகாவில் உயிரிழந்த 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்த 76 வயதான முஹம்மத் ஹுசைன் சித்திக் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி சவுதி அரேபியா நாட்டிலிருந்து மங்களூரு மார்க்கமாக கல்புர்கி வந்தடைந்தார். தனது சொந்த ஊருக்கு வரும்போது ஆரோக்கியமாக வந்த அவருக்கு இரண்டு நாட்களில் கொரோனா அறிகுறியான காய்ச்சல் மற்றும் இரும்பல் அதிகமானதால் கடந்த 6ஆம் தேதி கல்புர்கியின் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

corona virus n

வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 6,7மற்றும் 8 ஆகிய தேதிகளில் கல்புர்கியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலையில் மீண்டும் அவரது உறவினர்கள் கல்புர்கி சொந்த ஊருக்கு அழைத்து வந்தபோது வரும் வழியில் அவரது உயிர் மார்ச் 10ஆம் தேதி ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரிந்தது. இதை அடுத்து கல்புர்கி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

corona isolation ward 1

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை அவரது ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வெளியானநிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவின் முதல் உயிரிப்பு என கர்நாடக மாநிலத்தில் என்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்த முகமது ஹுசைன் சித்திக் மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத் சென்று வந்ததால் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக தெலுங்கானா அரசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். சித்திக் சென்று வந்த அனைத்து வழித்தடங்களிலும் மருத்துவமனைகளிலும் துரித பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள கர்நாடக அரசு தெலுங்கானா அரசிற்கு தகவல் அளித்துள்ளது.

1newsnationuser3

Next Post

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

Fri Mar 13 , 2020
சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 16 காசுகள் குறைந்துள்ளன.        சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடந்த சில வருடங்களால் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.        இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
petrol 1 0 0 2

You May Like