குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவுன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க.. சென்னை இனி இந்த மாதிரி விளையாடினால், நிச்சயம் பிளே ஆப் தகுதி பெறும்..! முழு விவரம் உள்ளே..! ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற 20 வயது தாய்..! இந்தியா vs ஆஸ்திரேலியா : நவம்பர் 27 முதல் தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி.. சுற்றுப்பயண அட்டவணை இதோ.. 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன்..! உல்லாசமாக இருந்து விட்டு கள்ளகாதலியை ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்..! இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..! ஹாப்பி பர்த்டே பிரபாஸ்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.. ஓட்டைப் பிரித்து வேட்டைக்குச் சென்ற இளைஞர்..! கத்திய மூதாட்டியை வாயை பொத்தி வன்கொடுமை செய்த கொடூரம்..! "பொம்பள நீ…என்னோட காரை வழிமறைப்பியா?" காரை வழி மறித்த பெண்களை வசைபாடிய மாவட்ட ஆட்சியர்..! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தமிழக அரசில் வேலை வாய்ப்பு…! 70 ஆண்டுகளில் முதன்முறையாக கோவிலுக்குள் வந்த 'சைவ முதலை'..! பூசாரி சொன்னதும் ஏரிக்குள் சென்ற ஆச்சரியம்..! “இதெல்லாம் பெருமை இல்ல.. கடமை..” முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்பை பங்கம் செய்த ஸ்டாலின்.. ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த 2 சிறுவர்கள் கொலை..! சடலத்துடன் உடலுறவு..! இந்தியாவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரே இந்துக் கோவில் இதுதான்.. சுவாரய்ஸமான தகவல்..

இந்தியாவின் தனிப்பெரும் பெருமை தல தோனி..#HAPPYBIRTHDAYDHONI

ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டம் முடிந்தது என இருந்த நிலையை, தல இருக்க பயம் ஏன் என மாற்றி காட்டிய பெரும் பெருமையை கொண்ட வீரர் மகேந்திர சிங் தோனி.

Dhoni1569482980132

நடுத்தர குடும்பத்தில் பிறந்த சிறுவன் அனுபவிக்ககூடிய அனைத்து வகையிலான சிக்கல்களையும் எதிர்கொண்ட தோனி, கிரிக்கெட் மீது தனக்கிருந்த தனியாத தாகம் காரணமாக இன்று கிரிக்கெட் அரங்கில் ஒரு மாபெரும் ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார். கடும் முயற்சி மற்றும் பல்வேறு தடைகளுக்கு பிறகு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றார் தோனி.

அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர் கண்ட தோல்வி ஆரம்பத்திலேயே அவரது அடையாளத்தை மறைத்தாலும், தனக்கான தனிப்பட்ட ஆட்ட நுணுக்கத்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அவரது அசாத்திய திறமையை கண்ட பாகிஸ்தானின் அப்போதைய தலைவரும் தோனியை பாராட்டினார். அடுத்தடுத்த அதிரடி ஆட்டங்கள் இந்திய அணியில் தோனிக்கான இடத்தை உறுதி செய்தது. 2007 உலகக்கோப்பையில் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வியானது, அணியை புதிய மாற்றத்தை நோக்கி வழிநடத்த வேண்டிய தலைமைக்கான தேவையை ஏற்படுத்தியது.

Image

அந்த சூழலில் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களில் ஒருவரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் தோனி. அந்த ஆச்சரியத்தை விட்டு இந்திய ரசிகர்கள் வெளியேறாத நிலையிலேயே, இளம் இந்திய அணியை வெறிகரமாக வழிநடத்தி ஐசிசியின் முதல் டீ20 உலகக்கோப்பையை வென்று இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் தோனி.

அந்த வெற்றி தோனியின் அடையாளத்தை மட்டுமின்றி இந்திய அணியின் அடுத்த கட்ட நகர்வையும் நிர்ணயித்தது. மெய்சிலிர்க்க வைக்கும் தலைமை பண்பு மட்டுமின்றி, ஹெலிகாப்டர் ஷாட்கள் உள்ளடக்கிய அதிரடி ஆட்டத்தால் கோடிகணக்கான ரசிகர்களின் தலைவனாக உருவெடுத்தார் தோனி.

CSK skipper MS Dhoni resources1 16a45058698 medium

தொடர்ந்து, ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் என பல இந்திய கேப்டன்களால் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனைகளை குறுகிய கால கட்டத்திலேயே நிகழ்த்திக் காட்டினார். இவரது அளப்பரிய சாதனையால் இந்தியாவை தாண்டி உலக கிரிக்கெட் அரங்கில் தோனியை போன்றொரு கேப்டன் இல்லை என்ற பெரும் அந்தஸ்தை அவருக்கு ஏற்படுத்தியது.

இதனிடையே, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட தொடங்கியது முதல் தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக மாறிப்போனார் தோனி. தமிழர்கள் அவருக்கு பாசமாய் சூட்டிய தல எனும் பெயரே தற்போது உலக அளவில் அவரது அடைமொழியாய் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கோலி, அஸ்வின், ஜடேஜா போன்ர பல்வேறு இளம் வீரர்களை வார்த்தெடுத்த பெருமையும் தோனியையே சேரும். சச்சினுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தனக்கென வெறித்தனமான ரசிகர்களை கொண்ட இந்திய வீரர் தோனி மட்டுமே.

MS DHONI SIX

2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக தோனி கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

Image

ஆட்டக்களத்தில் தோனி இறங்கினால் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது அதேசமயம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் மிக சுவாரசியமாகவே அமைந்துள்ளது.

தோனி வீட்டில் இருக்கும் போது தங்களுடைய செல்லப் பிராணிகளான சாரா மற்றும் ஷாம் ஆகிய இரண்டு நாய்களுடன் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருப்பார். தீவிர கடவுள் நம்பிக்கை உடைய தோனி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அவருக்கு மிகவும் பிடித்த கோவில் ராஞ்சியில் இருக்கும் டியோரி மதி.

தோனியின் மியூசிக் ஆர்வம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். பழைய கிளாசிக் ஹிந்தி படங்களின் பாடல்களை தான் தோனி எப்பவும் கேட்டுக்கொண்டிருப்பார். அதுமட்டுமில்லாமல் பிரபல இந்தி பாடகர் கிஷோர் குமாரின் பாடல்கள் தான் தோனிக்கு ரொம்ப பிடிக்கும்.

தோனி ஒரு நாண்-வெஜிடேரியன். அவருக்கு ரொம்ப பிடிச்ச உணவுகள் இரண்டை சொல்லலாம். ஒன்று சிக்கன், மற்றொன்று ஹாட் சாக்லேட் பட்ச். இது இரண்டு மட்டும் இருந்தால் போதும்.
தோனி ஒரு பயங்கர WWE பிரியர். அதில் டோனிக்கு மிகவும் பிடித்த மல்யுத்த வீரர்கள் பிரட் தி ஹிட்மேன் ஹார்ட் மற்றும் ஹல்க் ஹகான்.

MS Dhoni with Wife Sakshi and Daughter Ziva

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோனி தான். டெஸ்ட் மேட்சில் அவருடைய கேப்டன்சி வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும், ஒருநாள் போட்டியில் அவருடைய கேப்டன்சி வெற்றி வாய்ப்பு 56.19 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் ஷாருக்கானுக்கு அடுத்து அதிகமான விளம்பர பிராண்டுகளை நடிப்பவர் மகேந்திர சிங் தோனி. தோனியின் பெரும்பாலான கார்களில் நம்பர் 007 தான் இருக்கும்.

தல தோனியின் அதிரடி ஆட்டத்தை களத்தில் காண காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பில் #HAPPYBIRTHDAYDHONI

1newsnationuser4

Next Post

"விசில் போடு"... பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தல'... ரசிகர்கள் கொண்டாட்டம்...

Tue Jul 7 , 2020
‘கேப்டன்’ ‘தல’ என்று அனைவராலும் புகழாரம் சூட்டப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி அவர்களின் 39 வது பிறந்த தினத்தை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஜூலை 7, 1981 ல் பிறந்தார் தோனி. 1990-00 ல் கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடர்ந்தார். தன் திறமையால் வெகு விரைவிலேயே 2007 ல் டி20 உலகக்கோப்பை போட்டியில் கேப்டன் ஆனார். கேப்டன் […]
anV8PkmK

You May Like