பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி…

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய டி.20 போட்டியில் 160 ரன்கள் எடுத்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் டி20 உலக கோப்பை சூப்பர் 12 வது சுற்று போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரில் புவனேஷ்வர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது .

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஆனால் பாகிஸ்தானின் அபார பந்து வீச்சு கே.எல்.ராகுல் , ரோகித் ஷர்மா தடுமாற வைத்தது. 4 ரன் எடுத்தநிலையில் ராகுல் நசீம் அவுட்டானார். 3.2 ஓவரில் 4 ரன் எடுத்து ரோகித் அவுட்டானார். அடுத்துவந்த சூர்யா குமார் 15 ரன்னில் அவுட் ஆனார்.

6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்த நிலையில் திணறியது. அக்சர்படேலும் , 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 6.1 ஓவரிலேயே 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் கோலி விளையாடினார். நிதானமாக விளையாடி விக்கெட் கொடுக்காமல் விளையாடியதால் 15 ஓவர்கள் வரை தாக்குபிடித்தார். 16வது ஓவர் முடிவில் 106-4 என எடுத்தது. இந்திய அணி பின்னர் வேகம் காட்டி 18வது ஓவரில் ரன்களை குவித்தது.

இதனால் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 19 ஓவரில் கோலி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார் கோலி . இந்நிலையில் பாண்டியா சிக்ஸர் அடிக்க முயன்றபோது விக்கெட் கொடுத்தார். தினேஷ் கார்த்திக் பின்னர் சிங்கிள் அடித்தார். பின்னர் தினேஷ் கார்த்திக்கு வெளியேறினார். அஸ்வினுக்கு முதல் பந்தில் வைட் கொடுக்கப்பட்டதால் மேட்ச் ட்ரா ஆனுது. கடைசி பந்தில் 1 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் 1 ரன் எடுத்து இந்தியா வெற்றியை நிலைநாட்டினார்.53 பந்தில் 4 சிக்ஸ் , 6 பவண்டரி என 82 ரன்கள் கோலி அடித்துள்ளார். இதன் காரணமாகவே இந்தியா வென்றது .

Next Post

இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் எது தெரியுமா?

Sun Oct 23 , 2022
ஆசியாவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமான தகவல் என்ன என்றால் பட்டியலில் டெல்லி இல்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகவும் உள்ளது. ஆசிய அளவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் காற்று மாசு அதிக அளவில் இருக்கும். மாசு அளவு அபாயகரமான அளவு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் அடர்த்தியான புகை […]
அபாய நிலைக்கு மாறிய டெல்லி..!! இதற்கெல்லாம் அதிரடி தடை விதிப்பு..!! பரபரப்பு உத்தரவு

You May Like